Erode Cancer Centre – Best Oncology Hospital in Tamilnadu

நன்றியும் நினைவுகளும் நிறைந்த ஒரு இதயநெகிழ்ச்சி தருணம்

நன்றியும் நினைவுகளும் நிறைந்த ஒரு இதயநெகிழ்ச்சி தருணம்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருமதி ஹேமாமாலினி (ஆசிரியை) அவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு நமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2023 ஆம் ஆண்டு அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.

அவர்களின் இறுதி நாட்களில், அவருக்கு அன்போடு சேவை செய்த மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது, அவர்களின் தாயாரின் இறுதி ஆசையாக இருந்தது. அந்த புனித ஆசையை நினைவுகூர்ந்து, திருமதி ஹேமாமாலினி அவர்களின் குடும்பத்தினர், ஒவ்வொரு ஆண்டும் தாயாரின் பிறந்தநாள் நாளில் நமது மருத்துவமனைக்கு வந்து, நமது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் 13.10.2025 அன்று, அவர்கள் நமது மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், அனைவருக்கும் மதிய உணவு வழங்கி அன்பையும் நன்றியையும் பகிர்ந்தனர்.

அவர்களின் நன்றியுணர்வும் அன்பும் நமது இதயங்களை நெகிழச் செய்தது. பரிவும் பாசமும் நிறைந்த இந்த நினைவு எப்போதும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.