12.11.2025 அன்று ஈரோட்டில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஈரோடு கேன்சர் சென்டர் இணைந்து “புகையில்லா இளைய சமுதாயம்” உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் திருமதி N. சிந்துஜா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில்
- டாக்டர் கே. வேலவன் – புற்றுநோய் விழிப்புணர்வு உரை
- டாக்டர் சாந்தகுமாரி – புற்றுநோய் தடுப்பு
- டாக்டர் கார்த்திகேயன் – புகையிலை & புற்றுநோய் அவர்கள் சிறப்புரைகள் வழங்கினர்.
நந்தா மற்றும் JKK கல்வி நிறுவன மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, புகையிலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர்.
பேரணி காலிங்கராயன் அரசு விருந்தினர் இல்லத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சி நிறைவில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த ஈரோடு கேன்சர் சென்டர் மார்க்கெட்டிங் குழு கௌரவிக்கப்பட்டது.
ஈரோடு கேன்சர் சென்டர் – New Hope in Cancer Care






