Erode Cancer Centre – Best Oncology Hospital in Tamilnadu

சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 – கூட்டுறவு பணியாளர்களுக்கான சிறப்பு புற்றுநோய் பரிசோதனை முகாம்

சமூக நலனுக்காக ஒரு நல்லிணக்க முயற்சி — கூட்டுறவு பணியாளர்களுக்கான சிறப்பு புற்றுநோய் பரிசோதனை முகாம். நன்றி, ஈரோடு கூட்டுறவு சங்கம்.

சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 04.12.2025 அன்று பவானி தளவாய்பேட்டையில் நடைபெற்றது.

இம்முகாமில் ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினரால் 70-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Pap Smear) பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

சமூக நலனைக் கருதி நடத்தப்படும் இத்தகைய முகாம்கள், பணியாளர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இம்முகாமை ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெறச் செய்த ஈரோடு கூட்டுறவு சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.