24.10.21 ஞாயிற்றுக்கிழமை அன்று அவல் பூந்தறை யில் மருத்துவ முகாம் நடைபெற்றது. நமது பாரதி ஜனதா கட்சி MLA Dr.C.K. சரஸ்வதி துவக்க நமது முன்னாள் MLA திரு. சிவ சுப்ரமணியம் மற்றும் திரு. பாலு குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இம் முகாமில் ஈரோடு கேன்சர் சென்டர் Managing Director Dr.K. வேலவன் மற்றும் Dr. மதுமிதா குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கினர். அவல்பூந்தறையில் மக்கள் 200க்கு மேல் மருத்துவ முகாமில் பங்கேற்று புற்று நோயின் விழிப்புணர்வு அடைந்தனர் மற்றும் பொதுவான மருத்துவ ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் மக்கள் அனைவரும் புற்று நோயின் அறிகுறிகள் பற்றியும் உடம்பில் உள்ள குறைகளையும் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அறிந்தனர். இந்த முகாம் ஒருங்கிணைப்பு செய்த அவல் பூந்தரை தலைவர் நன்றி தெரிவிக்கிறோம்.
