camp-1.jpeg
28/Oct/2020

விடுமுறை அரசாங்க ஊழியர்கள் அரசு
சென்னை: அரசு ஊழியர்கள் புற்றுநோய் சிகிச்சை பெற கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பொதுத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை அளிக்க தொடக்கம் முதல் முடியும் வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


74469304_2507274882892878_4217245211329298432_n.jpg
28/Oct/2020

Cancer survivors and World Cancer Day.

Our survivor sharing his experience with the fellow patients and creating awareness.

Cancer survivors and World Cancer Day.
Date 8.11.2019. Friday from 10 a.m. to 2 p.m. Venue: Erode Cancer Center, Chitherai valagam. At exactly 10 am the students started singing the prayer song.

The function was inaugurated by Dr. K. Velavan, Managing Director, Erode Cancer Center, Dr. P. Ponmalar, Director of the Hospital, Mrs. Vijayarani, the beneficiaries of the Erode Cancer Center and Mrs.Lavanya, the Head of Bannari Amman College.
Chief guest will be Dr. K. Velavana . In his special article, he outlined the cancer, its symptoms and the way it spreads, and the 7000 cancer patients who have been diagnosed with cancer for the past 13 years in a timely manner.

Hospital Director Dr. P. Ponmler and Erode,Dr.Jeevanandam presented the special. At the ceremony, the hospita patients described their treatment and the benefits they had received, inspiring and encouraging the beneficiaries.

In the next event, the men and women of BAC sang their most beautiful songs in a special voice and entertained the hospital audience. BAC students played the musical instruments that they brought in and performed the songs very well. Similarly, the college student mimicked many voices and entertained the public. One student performed an innovative program called Beatbox, which read and produced several musical sounds from his mouth.

Finally there was a debate on whether life is for food and not for food. The ceremony was completed quite simply, with drinks and lunch served to all who attended. At the end of the ceremony, Rozario, Marketing manager of the Erode Cancer Center, concluded the ceremony with a heartfelt gratitude to all who attended and special thanks to Faculty Mr.Naveen and Ms.Lavanya and BAI students.
உலக புற்றுநோய் தினம்.
நாள் 8.11.2019. வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை.
இடம்:ஈரோடு கேன்சர் சென்டர், சித்திரை வளாகம்.

ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் பண்ணாரி அம்மன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சத்தியமங்கலம் இணைந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் புற்றுநோய் வென்றோர் தினம் மற்றும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஆகியவை கடைபிடிக்கப்பட்டது. சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களால் இறைவணக்கம் பாடல் பாட விழா ஆரம்பமாகியது.

விழாவினை ஈரோடு கேன்சர் சென்டரில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.K.வேலவன் அவர்கள், மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.P.பொன்மலர் அவர்களும்,திருமதி.விஜயராணி, அவர்களும் ஈரோடு கேன்சர் சென்டர் இன் பயனாளிகளும், அம்மன் காலேஜ் ஆசிரியை திருமதி.லாவண்யா அவர்களும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

வரவேற்புரை பண்ணாரி அம்மன் காலேஜ் மாணவர்கள் வழங்க சிறப்பு விருந்தினர் டாக்டர் K. வேலவன். தன்னுடைய சிறப்புரையில் புற்றுநோய் பற்றியும் அதன் அறிகுறிகள் மற்றும் அது பரவும் விதம் அதற்குரிய மருத்துவ முறைகள் முதலியவற்றை சிறப்பாக எடுத்துரைத்தார் மற்றும் கடந்த 13 வருடங்களாக 7000 புற்றுநோய் நோயாளிகளுக்கு சிறப்பான வைத்தியம் பார்த்து அவர்கள் புற்று நோய் மிகச் சரியான நேரத்தில் கண்டறிய பட்டு, புற்றுநோயிலிருந்து காப்பாற்றப்பட்டு தரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக பேசினார். மேற்படி விழாவில் மருத்துவமனை இயக்குனர் Dr. P.பொன்மலர் அவர்களும், ஈரோடு மனநல மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள். விழாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் patients தாங்கள் பெற்ற சிகிச்சையும் அதைப்பற்றிய பயன்களையும் எடுத்துரைத்தார்கள், கேட்டுக்கொண்டிருந்த பயனாளிகளுக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் கொடுக்கும் வண்ணமாக அமைந்திருந்தது. அடுத்த நிகழ்வாக பண்ணாரி அம்மன் கல்லூரியிலிருந்து பெண்களும் ஆண்களும் தங்களுக்கே உரிய சிறப்பு வாய்ந்த குரலில் மிக அருமையான பாடல்களை பாடி மருத்துவமனையின் பயனாளிகளை மகிழ்வித்தார்கள். தனிநபர் நிகழ்ச்சியாக பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த இசைக்கருவிகளை வாசித்து கொண்டு அதற்கான பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார் அது அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்தது. அதேபோல கல்லூரி மாணவர் பல குரல்களில் மிமிக்ரி செய்து பொது மக்களை மகிழ்வித்தனர். ஒரு மாணவர் பீட்பாக்ஸ் என்ற புதுமையான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் தன்னுடைய வாயிலிருந்து பல இசைக்கருவிகளின் ஓசைகளை வாசித்து கட்டினார். இறுதியாக வாழ்வதற்காக உணவு உணவிற்காக வாழ்க்கையா என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு விழா மிக எளிமையாக நிறைவுபெற்றது. விழாவின் இறுதியில் ஈரோடு கேன்சர் சென்டர் இன் விளம்பரப் பிரிவு மேலாளர் ரோசாரியோ அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்க விழா இனிதே முடிவுற்றத


WhatsApp-Image-2019-10-09-at-15.18.05.jpeg
28/Oct/2020

புற்று நோய் விழிப்புணர்வு உரை

*புற்று நோய் விழிப்புணர்வு காணொளி காட்சி விளக்கம்

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

நாள் : 11-10-2019 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 10.30 மணியளவில்

இடம் : கிரேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பவானி.


Contact Us

Erode Cancer Centre
1/393 Velavan Nagar, Perundurai Road , Thindal, Erode, Tamil Nadu
erodecancercentre@gmail.com
+91- 98428 22443
+91 - 424 – 2339704, 2339705
www.erodecancercentre.com